ராஜ ராஜ சோழன் எப்படி இறந்தார்..! அவர் கொலை செய்ய பட்டாரா?

Thanks to Oneindia

https://tamil.nativeplanet.com/travel-guide/visit-the-place-where-great-king-raja-raja-cholan-lived-001477.html?c=hnativeplanet

உலகையே வென்று சரித்திரம் படைத்திருந்த சோழர்களில் முக்கியமானவரான ராஜராஜசோழன் இயற்கை மரணம் அடையவில்லை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

பொதுவாக வரலாற்றில் கூறப்படுவது எதையும் அப்படியே நம்பிவிடமுடியாதுதான். ஆனால் பலதரப்பட்ட ஆய்வுகளுக்குப்பிறகு, பல அறிஞர்களின் கருத்துக்களுக்குப்பிறகு அவற்றின் அதிகபட்ச சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் ராஜ ராஜ சோழன் துரோகத்தால் வீழ்ந்தார் என்று நம்பப்படுகிறது.

அவரைக் கொன்றது யார்? எங்கே கொல்லப்பட்டார் என்பது தெரிந்தால் உங்கள் மனம் அதிர்ச்சியில் உறையும். ஆம்.. கொல்லப்பட்டது அப்படி ஒரு இடத்தில். வாருங்கள் அந்த இடத்தைப் பற்றி காணலாம்

ராஜ ராஜ சோழன் எங்கே எப்படி கொலை செய்யப்பட்டார்?

ராஜ ராஜ சோழன் தன் மகனான ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டி விட்டு, அவனை வடக்கு நோக்கி படையெடுக்க ஆணையிட்டான். அதற்கு முக்கிய காரணமா இருந்தது மானியக்கேடம் எனும் நாடு.

மானியகேடம்

தன் வாழ்நாளில் எத்தனையோ பல சாதனைகளைச் செய்து வந்த ராஜ ராஜ சோழன், பல போர்களில் வென்று பல நாடுகளைக் கைப்பற்றினான். ஆனால் அவனது எண்ணம் மானிய கேட நாட்டில் மட்டும் ஈடேறவில்லை.

லட்சியம்

ராஜராஜனின் லட்சியமான இந்த நாட்டை பிடிக்கும் போட்டியில் வெற்றிபெறவேண்டும் என ராஜேந்திர சோழனை அறிவுறுத்தி அனுப்பி வைத்தான் ராஜராஜ சோழன்.

ராஜராஜசோழன் எடுத்த கடும் சூளுரை
நீ வெற்றி கொண்டு திரும்பும் வரையில் அரண்மனை புகுவதில்லை என தஞ்சை கோயிலிலேயே தங்கியுள்ளார் ராஜராஜசோழன்.

உலகை ஆண்ட சோழர்களின் நாடு எவ்வளவு பெரியது தெரியுமா?

கோதாவரி
ஒரு மாத இடவெளியில் போகும்வழியிலுள்ள சிற்றூர் அரசர்களை வென்று தன் வசப்படுத்திய ராஜேந்திரன், கோதாவரி நதிக்கரையை அடைந்தான். அங்கு பாதி படையை நிறுத்திக்கொண்டு, தன் படைத் தளபதியான பல்லவராயனை மட்டும் வடக்கு நோக்கி அனுப்பினான்.

கலிங்கம்

ஆந்திர , கர்நாடக வடமாவட்டங்களை உள்ளடக்கிய கலிங்க நாடு ஒட்டநாடு மற்றும் சில சிற்றரசர்களின் உதவியுடன் ராஜேந்திரனை எதிர்க்க எத்தணித்தன.

ஒட்டநாடு

 
ஒட்டநாடு என்பது தற்போதைய ஒடிசா பகுதிகளாகும்.

வேங்கை நாடு


தற்போதைய மத்தியபிரதேசம், ஓரிசாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய நாடு. இதுதான் வடநாடுகளுக்கு வாயிலாக அமைந்திருந்தது அந்தகாலத்தில். இதனால்தான் இதை வெற்றிகொள்ள ராஜேந்திரன் திட்டமிட்டான்.

ஆதரவு தந்த சாளுக்கிய நாடு


சாளுக்கிய நாடு அப்போது சோழநாட்டுடன் நட்புக்கரம் நீட்டியிருந்தது,. இதன் உதவியுடன் பல நாடுகளைப் பிடித்தனர் சோழர்கள்.

சோழ Vs சாளுக்கிய


சோழநாட்டுக்கு நட்புக்கரம் நீட்டியிருந்த சாளுக்கியர்கள் சில மாற்றங்களில் எதிராக திரும்பி, ஒட்டநாடு, கலிங்கத்தை உடன்கொண்டு சோழர்கள் மீது படையெடுத்தனர்.

ராஜேந்திரனின் மகன்

ராஜேந்திர சோழனின் மூத்த மகனை போருக்கு அழைத்த ராஜேந்திரன் அதன்மூலம் சாளுக்கியரை வென்றுவிடலாம் என கணித்தான். ஆனால்....

தொடர் வெற்றிகள்

சக்கரகோட்டம், ஒட்டநாடுகளை வெற்றிகொண்டது பெரும்படை. இதில் வங்கநாடு சமாதானம் செய்ய உடன்படிக்கை கொண்டது. எப்போதும் போர் நெறிமுறைகளில் நேர்மையை கடைபிடிக்கும் தமிழர்கள் அவரை நண்பனாக ஏற்றுக்கொண்டனர்.

மகனை இழந்த சோழன்

இந்த போரில் கிட்டத்தட்ட எல்லாரையும் வெற்றிகொண்டு இறுதிக்கட்டத்தை அடையும் நிலையில் மகனை பறிகொடுத்தான் ராஜேந்திரன்.

மானியகேடம் என்னாயிற்று

தன் மகனை இழந்த துக்கம் ஒரு பக்கம், தொடர் போர் மறுபக்கமென சோர்ந்து போனான் ராஜேந்திரன். இனியும் போரிட்டால், பெரும்படையை இழக்க நேரிடும் என்பதால், போர் திட்டத்தை கைவிட்டு நாடு திரும்பினான் ராஜேந்திரன்.

தோல்வியால் மனம்குறுகிய சோழன்

இந்த தோல்வியை எப்படி தந்தையிடம் சொல்ல என்று வந்த ராஜேந்திரன், தன் தந்தை ராஜராஜன் அரண்மனையில் இல்லை என்பதையறிந்து கோயிலுக்குச் சென்றான்.

கஜினிமுகமது


உலகம் முழுவதும் படையெடுத்த கஜினிமுகமது சோழநாட்டுக்கும் வந்து கொள்ளையடித்துச் சென்றான். எரியுண்டது சோமநாதர் ஆலயம்

கங்கை தாண்டா சோழன்


இதனால் பெரும் அவதிக்குள்ளான ராஜேந்திரன் கங்கையை தாண்டி படையெடுக்கும் திட்டத்தை கைவிட்டான்.

தந்தை சொல் மீறா ராஜேந்திரன்

என்னதான் ராஜேந்திர சோழன் மன்னராக இருந்தாலும், அவர் தன் தந்தை சொல்லை மீறியதில்லை என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள்.

கருத்து மோதல்


நாளடைவில் ராஜேந்திரன் ராஜராஜனுடன் கருத்துமோதலில் ஈடுபட்டார் எனவும் வரலாறு தெரிவிக்கிறது.

உண்மையை போட்டுடைத்த பெண்


லெஸ்லி எனும் கல்வெட்டுஆய்வு செய்யும் ஒரு பெண், ராஜராஜனின் மரணத்துக்கு யார் காரணம் என்பதை போட்டுடைத்தார். இது வரலாற்றில் இடம்பெற்றிருந்தாலும் பலர் இதை திருத்தப்பட்ட வரலாறாகத்தான் நினைக்கின்றனர்.

டெக்ஸாஸ் பல்கலைகழகம்

இந்த பெண் கிழக்கு ஆசிய ஆய்வு பணியை டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் செய்து வந்தவர். அவர் குறிப்பிட்ட ஒரு விசயம் ராஜராஜனின் மரணத்துக்கு யார் காரணம் என்பது. இது பலரால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், சாத்தியக்கூறுகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

தந்தையை கொன்ற மகன்


ராஜேந்திரன்தான் தன் தந்தையை கொன்றதாகவும், இது அவர்களுக்குள்ள கருத்துமோதலினால் நிகழ்ந்ததாகவும் லெஸ்லி குறிப்பிட்டுள்ளார். இதை ராஜராஜனின் படைத்தளபதி வம்சத்தினர் வாயிலாக அறியமுடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




பதவிக்காக

 
பொதுவாக வடநாட்டு மன்னர்கள்தான் பதவிக்காக தந்தையை கொன்ற பல செய்திகளை கேட்டிருப்போம். ஆனால் பதவியை கொடுத்தும், தன் தந்தையை ராஜேந்திரன் கொன்றிருப்பாரா? அறநெறிகளை உலகுக்கு உணர்த்திய தமிழ் மன்னர்கள் இப்படி செய்திருப்பார்களா என்பது பலரால் எழுப்பப்படும் சந்தேகமாகவே உள்ளது.