Food Varieties in India

 



The cuisines in India are as diverse as its multi-ethnic culture. The exotic and the delicious dishes of India are marked by the subtle uses of spices and herbs. Every region has their own claim to fame dishes and different styles of cooking. The method of cooking, the flavor and their specialties change with the landscapes. Here are 31 dishes that define the cuisines of India.


1. Rogan Josh



It is an aromatic lamb dish of Persian origin and stands as one of the best signature dishes of the state of Jammu & Kashmir. The dish is ideally enjoyed with steaming hot white rice.


2. Aloo ke Gutke



The dish is found in the local regions of Uttrakhand. It is basically potatoes stir fried in spices. It is best served with hillside cucumber yogurt and a cup or two of Indian Chai. The combination may sound odd, but that is the usual menu of a typical Uttarakhand tea-time affair.


3. Litti Chokha


It is a common and much loved dish of Bihar, served for breakfast or as a tea time snack and sometimes even for lunch with dal. Litti is often stuffed with seasoned fried gram flour powder and baked on coal or in an oven, and Chokha is mashed vegetable, usually prepared with potatoes, tomatoes and eggplant.


4. Rosogulla/ Rasgulla


It is a regional classic dessert from the state of West Bengal. These are delicate cottage cheese dumplings, soaked in sugar syrup.


5. Dum ki Biryani


It is a form of biryani, from Karnataka. It was originated after blending Mughlai and Iranian cuisine in the kitchens of the Nizam. It is usually served with Dahi chutney (yogurt, mint, and onion) and Mirchi ka salan – a green chili curry. Baghara baingan(roasted Eggplant) is a common side dish.


6. Idli – Sambar


It is a traditional breakfast in South Indian households. Idli is a savory cake. They are made by steaming a batter consisting of fermented black lentils (de-husked) and rice. Sambar is a lentil-based vegetable stew or chowder based on a broth. They are frequently served with chutnies (coconut based), kaara chutney (onion based) or Spicy Fish Curries.


7. Pav Bhaji


It is a fast food dish from Maharashtra. It consists of a vegetable curry (bhaji) served with a soft bread roll (pav).


8. Dhokla


It is a vegetarian food item that originates from Gujarat. It is made with gram flour and subsequently steamed. Dhokla can be eaten for breakfast, as the main course, as a side dish, or as a snack. It is often served with tamarind chutney or green coriander or mint chutney.


9. Dal-Baati-Churma


It is a traditional Rajasthani treat. It is served with a spicy dal, the sweet churma along with deep fried crunchy baatis.


10. Chole Bhature


It is the unofficial dish of New Delhi. It is a concoction of spicy curried chickpeas (chole) and puffy fried white-flour bread (bhature), most often eaten together for breakfast and lunch.


11. Makki ki Roti-Sarson ka Saag


It is a traditional dish from Punjab, served with white butter. Sarson ka saag is made from mustard green leaves and makki ki roti is Maize flour flatbread. It is often eaten for lunch and dinner.


12. Meen Curry


It is a type of fish curry from Kerala. It can be found in many variations, with or without coconut milk or fried or untried fried fish. Usually, Meen Curry is prepared in an open mouth earthenware pot.


13. Akki Roti


It is a beloved favourite in Karnataka. It is a spicy bread made from rice flour and served with coconut chutney.


14. Prawn Vindaloo


It is a famous hot and spicy Goan dish. Vindaloo is mainly served with rice, pao or rotis. Goa has various takes on Vindaloo.


15. Chaat


Chaat refers to a delicious savoury snack. It is typically served at a road side food stall or food carts. Most chaats originated in parts of Uttar Pradesh. The chaat specialties vary from city to city. Some popular chaat items are Pani Puri, Aloo tikki, Dahi Vada and Sev Puri.


16. Thekua


It’s a popular dish in the regions of Bihar and Jharkhand. It is a revered prasad (offering to god) in the Chhath puja. It has been used as a sweet snack for centuries in these places. They are made of wheat flour, sugar or jaggery, and ghee.


17. Pitha


It’s a popular dish in Orissa and Assam. It’s basically rice pastry with different variations such as til pitha (sesame seeds stuffed pitha) and nariyal pitha (shredded coconut filled pitta).


18. Jadoh


The dish originates from Meghalaya. It is a luscious pork and rice-based Khasi delicacy. No ceremony is complete without this dish.


19. Chikhvi


It is the staple dish of Tripura. It is made up of bamboo shoots and pork. However, the best thing about this dish is that it is made without oil. It is served hot with plain rice.


20. Sanpiau


It is a staple dish from Mizoram. It is prepared with rice porridge, and is served with fresh coriander paste, spring onions, crushed black pepper, zesty fish sauce and finely powdered rice.


21. Iromba


It is a trademark dish of Manipur. It is is prepared with fermented fish, mashed potatoes, fresh green leaves and blazing red chillies. It is served with rice or Manipuri Millet bread or both.


22. Phagshapa


It is a Nepali Pork dish from Sikkim. It is a strip of pork stewed with radish and dried chillies. It goes really well with just plain rice.


23. Anishi Lon


Nagaland is well known for its pork delicacies. Anishi Lon is prepared traditionally by steaming in a bamboo shoot, smoked pork dish combined with fermented yam leaves and the very fuming spiciest chillies known as Raja Chillies. The smoked pork curry tastes heavenly with steamed plain rice.


24. Zan


This popular dish belongs to Arunachal Pradesh. It is prepared with millet flour and boiling water. This appetizing spicy porridge can be enjoyed with green vegetables and charred meat.


25. Soya Dosa


It is a typical pondicherry dish. The traditional methodology involves combining soya milk with wheat flour with other dry spices, but there are various variations also present.


26. Dalma


It is a popular dish from Odisha. It is made from toor dal and chopped vegetables such as green papaya, unripe banana, pumpkin, and gourd. It is among the 56 food items (Mahaprasad) offered to Lord Jagannath in the temple of Puri.


27. Red Ant Chutney


This dish can be found in Chattisgarh. This is one of the most bizarre dishes made in India. It is made from red ants along with their eggs. Don’t worry, it’s a popular dish in this state and you won’t die after eating it.


28. Sepu Badi


It is specialty from Himachal Pradesh. It is a spinach curry with lentil dumplings. It is served with cumin rice or roti.


29. Bhutte ki Kees


It’s a street food from Madhya Pradesh. It is traditionally made by grating corn off the cob, then roasting it in ghee and spices.


30. Lassi


It originates from Punjab. It is a blend of yogurt, water, spices and sometimes, fruit.


31. Jalebi


It is hard to pinpoint exactly where it has originated from. It is a melt-in-the-mouth sweet. It is made by deep-frying a wheat flour batter in circular shapes, which are then soaked in sugar syrup. It’s a Mithai, you just can’t resist.

ஆபாச வெப்சைட்டில் இந்தியர்கள் அதிகம் தேடிய வீடியோ எது? பெண்களும் பார்க்கிறார்களா? சுவாரசிய சர்வே

ஆபாச வெப்சைட்டில் இந்தியர்கள் அதிகம் தேடிய வீடியோ எது? பெண்களும் பார்க்கிறார்களா? சுவாரசிய சர்வே டெல்லி: ஆபாச காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்களுக்கு தனி விருப்பம் உள்ளது. 2018ல் போர்ன்ஹப் வெப்சைட்டை பார்த்த மக்களை கொண்ட, டாப் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. போர்ன்ஹப், 6வது ஆண்டு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கனடாவை சேர்ந்த இந்த வெப்சைட், கூறியுள்ள தகவல்கள் சுவாரசியமானவை. போர்ன்ஹப் வெப்சைட்டை பார்ப்போர் எண்ணிக்கை, அடிப்படையில், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் 2வது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. மொத்த தினசரி வருகையில் டாப் 20 நாட்கள் 80 சதவீத பங்களிப்பை அளித்து வருகின்றன. 33.5 பில்லியன் பேஜ் விசிட் 2018ல் பதிவாகியுள்ளது. 2017ம் ஆண்டைவிட 5 பில்லியன் விசிட் அதிகமாகும். உலகின் மொத்த மக்கள் தொகையே 7.55 பில்லியன்தான் என்பது இதில் மற்றொரு சுவாரசியம். அதாவது, இந்த வெப்சைட்டை மீண்டும், மீண்டும் பார்த்தவர்களே பார்த்துள்ளனர். இந்தியாவிலிருந்து இந்த வெப்சைட்டை பார்ப்பதில் 30 சதவீதம் பேர் பெண்களாகும். உத்தரகாண்ட் ஹைகோர்ட் உத்தரவை தொடர்ந்து, இந்தியாவில் 827 ஆபாச வெப்சைட்டுகளை தடை செய்ய டிராய் உத்தரவிட்டது. ஆனால், ஆபாச தளங்களை பார்ப்பதை தடுக்க முடியவில்லை என்பதை இந்த புள்ளி விவரம் உறுதி செய்கிறது. தேடப்பட்ட வார்த்தை இந்தியாவை சேர்ந்த பார்வையாளர்கள், உள்நாட்டு பிட்டு படங்களைத்தான் விரும்பி பார்க்கிறார்களாம். அதிகப்படியான தேடும் சொல் இந்தியன் அல்லது ஹிந்தி என்பதாக உள்ளதாம். கடந்த வருடம் இந்தியன் ஒய்ப் என்பது அதிக தேடு வார்த்தையாக இருந்தது. இவ்வாண்டு, இந்தியன் என்பது அதிகமான தேடு வார்த்தையாக இருந்துள்ளது. இந்தியன் காலேஜ் கேர்ள்ஸ் என்பது 2வது இடத்தில் உள்ளது. ஹாட் செக்சி டீச்சர் என்ற வார்த்தையை இட்டுதேடுவோர் எண்ணிக்கை 423 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017ல், இந்தியன் பாபி தேவர் என்ற வார்த்தை 3வது இடத்தை பிடித்திருந்தது. நட்சத்திரங்கள் சன்னி லியோன் மற்றும் மியா கலிபா இருவருமே கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், அதிகமாக தேடப்பட்ட ஆபாச நட்சத்திரங்களாகும். MILF மற்றும் லெஸ்பியன் ஆகியவை டாப் 2 கேட்டகிரியில் உள்ளன. இந்திய பார்வையாளர்களில் பெரும்பாலானோர், அறியாமல் எடுக்கும் வீடியோக்களை பார்க்கவே விரும்புகிறார்களாம்.

உதிரிபூக்கள் எப்பொழுதும் தமிழ் நெஞ்சங்களில் உதிராத பூக்கள்!

அத்திப்பூத்தது போல், எப்போதாவது ஒரு படம் வந்து, அப்படியே உலுக்கியெடுத்துவிடும். ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகம் அந்தப்படத்தைக் கொண்டாடித் தீர்க்கும். ரசிகர்கள், சிலாகித்து சிலிர்ப்பார்கள். படம் ரிலீசாகி, நூறு நாள் கடந்து ஓடி, அடுத்த படம் வரும் வரைக்கும் பரவலாகப் பேசுவார்கள். பிறகு அந்தப் படத்தை மறந்தேவிடுவார்கள். அல்லது படம் பற்றி எப்போதாவது பேசுவார்கள். ஆனால் இன்றைக்கும் ஒரு படத்தைப் பற்றி, வியந்து, நெகிழ்ந்து, நெக்குருகி, கனத்த இதயத்துடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், அது அநேகமாக ஒரேயொரு படமாகத்தான் இருக்கும் .அது... ‘உதிரிப்பூக்கள்’.

அதுவொரு அழகிய கிராமம். அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷன். ரயில் வந்து நிற்கும். ரயிலில் சரத்பாபு மனைவியுடன் வந்து இறங்குவார். ஹெல்த் செண்டர் அதிகாரி. அதே ரயிலில், அதே ஊருக்கு சத்யன் வந்து இறங்குவார். இவர் பள்ளிக்கு வந்திருக்கும் வாத்தியார். அங்கே பள்ளி நிர்வாகி விஜயன்.
அந்த விஜயனுக்கு அடுத்தவர்கள் நன்றாக இருப்பது பிடிக்காது. நல்ல சட்டை போடுவது பிடிக்காது. அடுத்தவனுக்கு நல்ல பொண்டாட்டி அமைவது கூட பிடிக்காது. சாடிஸ்ட் குணங்களுடன் இருப்பார்.
விஜயனின் மனைவி அஸ்வினி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மனைவியை எப்போதும் திட்டிக் கொண்டிருப்பதுதான் விஜயனுக்கு வேலை. ‘உங்க அப்பாவையும் தங்கச்சியையும் ஊரை விட்டு போகச் சொல்லு’ என்பார். ‘உங்க அப்பனை, எங்கிட்ட வாங்கின கடனை அடைக்கச் சொல்லு’ என்பார். இப்படித்தான் அஸ்வினியின் ஒவ்வொரு நாள் பொழுதும் போய்க் கொண்டிருந்தது.
ஊரில் முடி திருத்தும் தொழில் செய்யும் சாமிக்கண்ணு. ஓடிப்போன மனைவி குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கும் குமரிமுத்து, வயோதிகமும் வறுமையும் கலந்து கட்டி சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அஸ்வினியின் அப்பா சாருஹாசன், கவலைகளைத் தூரப்போட்டுவிட்டு, கஷ்டம் மறந்து சிரித்து வளைய வரும் மதுமாலினி. இப்படியாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை.
புதிதாக வந்த வாத்தியாரும் அஸ்வினியின் தங்கையும் காதலிப்பார்கள். அவளை நீங்களே ஏன் கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது என விஜயனுக்கு தூபம் போடுவார் அல்லக்கை ஒருவர். அதற்கான முயற்சிகள் தோல்வியில் முடியும்.
ஊரில், ஹெல்த் சென்டருக்கு வந்திருக்கும் சரத்பாபு, ஒருகாலத்தில் அஸ்வினியைப் பெண் கேட்டிருப்பார். அவளின் துயரங்களை அறிந்துகொள்வார். இந்த விஷயம், விஜயனுக்குத் தெரியவர... இதைக் காரணம் காட்டியே மனைவியின் தங்கையை கட்டிக்கொள்ளப் பார்ப்பார். ஆனால், அது நடக்காமல் போகும். விஷயம் பஞ்சாயத்து வரை போகும். அஸ்வினியை தரம் தாழ்த்திப் பேசுவார். அறுத்து விடுகிறேன் என்பார். பிரிந்துவிடுவார்கள். அஸ்வினி, அப்பாவின் வீட்டில் இருக்க, குழந்தைகள் விஜயனிடம் இருப்பார்கள்.
நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகிவிடுவார் அஸ்வினி. பார்க்கக்கூட வராமல் இருப்பார் விஜயன். படுக்கையிலேயே இறந்துவிடுவார் அஸ்வினி.
இதன் பின்னர், வாத்தியாருக்கும் அஸ்வினி தங்கைக்கும் திருமணம் உறுதி செய்யப்படும். இதனிடையே அஸ்வினி இறந்த உடனேயே விஜயன் வேறொருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டிருப்பார்.
இந்தநிலையில், திருமணத்துக்கு முதல்நாள், அக்கா கணவரின் வீட்டுக்குச் செல்வார் தங்கச்சிக்காரி. ‘என் அக்கா பசங்களை எங்கிட்ட குடுத்துரு’ என்பார். கதவு சார்த்தி, அவளின் ஆடைகளை ஒவ்வொன்றாக உருவிப் போடுவார் விஜயன். இதுதான் உனக்கு தண்டனை. சாகறவரைக்கும் இதை நீ மறக்கவே மாட்டே’ என்பார்.
விஷயம் ஊருக்குத் தெரியவர, கொந்தளித்துப் போவார்கள் மக்கள். ஊர் திரண்டு, விஜயனைப் பிடிக்கும். விஜயன், ஊர்மக்கள் தலைமையில் ஆற்றங்கரைக்கு வருவார். ‘நீங்களாம் உங்களை மாதிரி என்னையை மாத்தணும்னு நெனைச்சீங்க. ஆனா என்னை மாதிரி, உங்க எல்லாரையும் மாத்திட்டேன். நான் செஞ்சதுலயே மிகப்பெரிய தவறு இதுதான்’ என்று சொல்லிவிட்டு, ஆற்றில் இறங்கி மூழ்கி இறந்து போவார்.
அம்மாவை இழந்து, அப்பாவையும் இழந்து, அந்த இரண்டு குழந்தைகளும் உதிரிப்பூக்களாகியிருக்கும். ஆற்றங்கரையில், அப்பாவைத் தேடியபடி ஓடிக்கொண்டிருக்க... படம் முடிந்துவிட்டிருக்கும்.
சைலண்ட் கில்லர் என்ற வாசகம் விஜயனுக்கும் பொருந்தும். இயலாமையால் புழுங்கும் தந்தை சாருஹாசன், அன்பே இல்லாத கணவனிடம் மாட்டிக்கொண்டு வேதனைப்படும் அஸ்வினி, ‘உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். சம்மதமா’ என்று கேட்கும் சரத்பாபு, பிறகு வேறொரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு ஊருக்கு வந்திருக்க, அஸ்வினி படும் வேதனையில் தவிக்கும் ஈர மனசு, விடலை மாறாதிருந்தும் அக்கா குழந்தைகள் மீது வாஞ்சையுடன் இருக்கும் மதுஷாலினி, ‘இன்னும் பையனுக்கு மொட்டை போடலியேம்மா’ என்று கேட்கும் முடிதிருத்தும் சாமிக்கண்ணு, ரெண்டாந்தாரமாய் வாக்கப்பட்டு மாட்டிக்கொண்டதை பளிச்சென்று சொல்லும் விஜயனின் மனைவி என அத்தனைக் கதாபாத்திரங்களும் வாழ்ந்திருப்பார்கள். முக்கியமாக, அஸ்வினியின் குழந்தைகளாக படம் முழுக்க வசனமே இல்லாமல் காஜா ஷெரீப்பும், பேபி அஞ்சுவும் மனம் கனக்கச் செய்துவிடுவார்கள்.
‘உங்க பொண்ணை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்பார் விஜயன். ‘நான் என் பொண்ணுக்கு அப்பாவாவே இருக்கேன். புரோக்கராக விரும்பலை’ என்பார் சாருஹாசன்.
கை விரல் ஆட்டி விளையாடிக் கொண்டிருப்பார் மதுஷாலினி. என்னம்மா இது என்பார் சாருஹாசன். விளையாட்டுப்பார் என்பார். ‘நாளைக்கு காலைல இந்த ஊரை விட்டு போறோம்’ என்பார். ஏம்பா என்பார். ‘இதுவும் ஒரு விளையாட்டுதாம்மா’ என்பார்.
அஸ்வினி சாககிடப்பார். கன்னம் தடவி, முத்தமிட்டு, கை பிடித்திருப்பார் குழந்தை அஞ்சு. அஸ்வினி இறந்துவிடுவார். அவரின் வளையல்களை தள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை.
அஸ்வினி இறந்ததும், மகனான சிறுவன் காஜாஷெரீப் மொட்டையடிக்க வேண்டும். ‘என்னால மொட்டையடிக்க முடியாதுங்க. ஒவ்வொரு முறையும் கேட்டுக்கிட்டே இருந்தேன். காலம் வரட்டும் காலம் வரட்டும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க அம்மா. இதுதான் அந்தக்காலம்னு நினைக்கும் போது, என்னால முடியலீங்க’ என்று கதறுவார் சாமிக்கண்னு.
ஒரு சின்ன கிராமம். கிராமத்தின் நாலு தெருக்கள். ஆறு. ஆற்றங்கரை. இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, அசோக்குமாரின் கேமிரா ஜாலம் காட்டியிருக்கும். எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ கதையை, அழகியல் கூட்டி திரைக்கதையாக்கி, காவியம் படைத்திருப்பார் மகேந்திரன்.
ஆற்றங்கரையில் விஜயனும் சரத்பாபுவும் பேசிக்கொள்வார்கள். கருத்து மோதல் கைகலப்பாகும். ஆனால் சண்டையைக் காட்சிப்படுத்தாமல், ஆறு, செடிகொடி, தரையில் விழுந்திருக்கும் மூக்குக்கண்ணாடி, வீசப்பட்ட துண்டு, கரையில் உள்ள நாணல், எங்கிருந்தோ ஒரு சிறுவன் தலை திருப்பிப் பார்ப்பது என்றெல்லாம் காட்டிவிட்டு, ரத்தம் வழியும் மூக்கைக் கழுவிக்கொண்டிருப்பார் சரத்பாபு. மிகப்பிரமாதமான காட்சி. மச்சினியின் உடலில் இருந்து ஒவ்வொரு ஆடையாகக் கழற்றிப் போடுவார் விஜயன். வார்த்தைக்கு வார்த்தை ‘ஆசீர்வாதம் ஆசீர்வாதம்’ என்பார். விஜயனை அடித்துக் கொன்றுவிடலாமா என்று தோன்றும்.
'வீட்டை விட்டு போகவிடாம என்னைத் தடுத்து நிறுத்தற பலம் உங்களுக்கு இருக்குதான். ஆனா, உங்களுக்குப் போடுற சாப்பாட்டுல, விஷம் கலந்து உங்களைக் கொன்ன பாவத்துக்கு என்னை ஆளாக்கிடாதீங்க’ என்று விஜயனின் இரண்டாவது மனைவி சொல்லும் போது, தியேட்டரே கைத்தட்டி, ‘அதைச் செய் முதல்ல’ என்று ஆமோதிக்கும்.
ஊர் சூழ்ந்திருக்க, செய்த தப்புக்குத் தண்டனையாக, கடைசியாக ஆற்றில் இறங்கி மூழ்கிச் சாக யத்தனிக்கும் வேளையில், குழந்தைகளை அழைத்து, ‘நல்லாப் படிக்கணும் நல்லவன்னு பேரெடுக்கணும். போயிட்டு வாங்க. முத்தம் கொடுங்க’ என்று கேட்கும் போது, அவ்வளவு காலமும் விஜயன் செய்த தப்பையெல்லாம் ‘போய்த்தொலையுது. மன்னிச்சிருவோம்’ என்று நம்மை நினைக்கவைத்துவிடும் காட்சி. ’உதிரிப்பூக்கள்’ படத்தின் நாயகன் விஜயன், மகேந்திரன், கதை என்று சொன்னாலும் உண்மையான ஹீரோ இளையராஜாதான். பின்னணி இசையின் மூலமாக, கதையின் கனத்தை, காட்சிகளின் சோகத்தை, சோகத்தின் வீரியத்தை, வீரியத்தில் உறைந்து கிடக்கும் துயரத்தை இசை வழியே நமக்குள் கடத்திவிடுவார் இளையராஜா. அந்த ‘அழகிய கண்ணே...’ பாடல் கேட்டு, மனம் கனக்காமல் எவருமே இருக்கமுடியாது. ‘உதிரிப்பூக்கள்’ மாதிரி ஒரு படம் எடுக்கமுடியாது என்று இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ‘உதிரிப்பூக்கள்’ என்று இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
ஆண் குழந்தையுடனும் பெண் குழந்தையுடனும் அந்த அம்மா அஸ்வினி நின்று கொண்டிருக்கும் புகைப்படமே உலுக்கியெடுத்ததைக் கூட, இப்போதும் மறக்கவில்லை ரசிகர்கள்.
1979ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி வெளியானது ‘உதிரிப்பூக்கள்’ . படம் வெளியாகி 40 ஆண்டுகளாகின்றன. இன்னும் 40 ஆண்டுகளானாலும் ‘உதிரிப்பூக்கள்’ தமிழ் நெஞ்சங்களில் என்றென்றைக்கும் உதிராத பூக்கள்.
இயக்குநர் மகேந்திரனுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு சல்யூட். விஜயனுக்கு முள்ளில்லாத பூக்கள் கொண்ட பொக்கே. அஸ்வினிக்கு மிகப்பெரிய வணக்கம். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் கேமிராவுக்கு செல்ல முத்தங்கள். சரத்பாபுவுக்கு நமஸ்காரம்!








கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள்

 கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள்

கவிஞர் கண்ணதாசன் முதன் முதலில் கதை வசனம் எழுதிய எம்.ஜி.ஆர் படம் "மதுரை வீரன்". படம் வெளியான ஆண்டு 1956.
"ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதத்தில் வரும் பாடலை பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி பெறாத எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் திருப்தி அடைந்தார் என்றால், அடிமைத்தனம் வேரூன்றி கிடக்கும் உலகின் எந்த மூலையிலும், "கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை" "கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை" "அச்சம் இன்றி ஆடி பாட வேண்டும் விடுதலை" "அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை" என்று இவரிடம் இருந்து வந்த வார்த்தைகளேயன்றி வேறொன்றும் இல்லை.
அண்ணாத்துரை புற்று நோயால் அவதியுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை நலம் விசாரிக்கும் வகையில், அந்த ஆண்டு வெளிவந்த "தில்லான மோகனாம்பாள்" திரைப்படத்தில், நடிகை பத்மினி, காயமுற்ற சிவாஜியை நலம் விசாரிப்பது போல் அமைந்த காட்சியின் பாடலை கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு எழுதுகின்றார்."நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா நலம் பெற வேண்டும் நீ இன்று நாளும் என் நெஞ்சில நினைவுண்டு இலைமறை காய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று" என்று பல்லவியிலும் "கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்" என்று சரணத்திலும், அன்றைய தி மு க விலிருந்து விலகியிருந்த கவிஞர், ஒரு பாட்டின் வாயிலாக நலம் விசாரித்த அழகு இன்றும் அலாதியான ஒன்று.
திமுகவில் இருந்து விலகிய கவிஞர் கண்ணதாசன், காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பது போலும், காமராஜருக்கு தூது விடுவது போலவும், "பட்டணத்தில் பூதம்" திரைப்படத்தில் வரும் "அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி" என்று சூசகமாக எழுதியிருப்பது தனி அழகு. காமராஜரின் தாயாரின் பெயர் "சிவகாமி அம்மாள்".
இறைவன் என்றால் யார்? அவர் எங்கு இருக்கின்றார்? இந்த கேள்விகளுக்கு கவிஞர் கண்ணதாசன் தனது பாணியில் ஒரு திரைப்பட பாடலில் இவ்வாறு கூறுகின்றார். "ஆண்டவன் கட்டளை" திரைப்படத்தில் வரும் "ஆறு மனமே ஆறு" என்ற பாடலில் "ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்". "அன்பு நன்றி கருணை கொள்பவன் மனித வடிவில் தெய்வம்" என்று நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வம் இருப்பதையும், மிருகம் இருப்பதையும் அறியும் வண்ணம் கூறிய மகா கவிஞன் கண்ணதாசன்.
"தாய் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்" "தாய் தூங்க தாலாட்டு நீ பாட வேண்டும்" "நீ பாடும் தாலாட்டை தாய் கேட்க வேண்டும்" "தன் நிலை மாறி அவள் கூட மொழி பேச வேண்டும்" என்று வேறொரு படத்திற்கு கவிஞர் எழுதிய இந்த தாலாட்டுப் பாடல்தான் பின்னாளில் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" "நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்" என்ற காதல் பாடலாக கவிஞரால் உருமாறியது.
சொல்ல வந்த கருத்தை, சொல்ல வந்த விஷயத்தை, அலங்கார வார்த்தைகளன்றி மிக இயல்பாகவும், எளிமையாகவும் தமிழின் இனிமை குன்றாமல் ஆழமான பொருள் கொண்டு, பாமரன் முதல் படித்தவன்வரை சென்றடையும் வண்ணம் பாடல்கள் புனைவதில் கவிஞருக்கு இணை கவிஞரே.
ஒரே பாடலில் விரகதாபத்தையும், துறவறத்தையும் நியாயப்படுத்தும் வகையில் பாடல் எழுதுவதென்றால் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. "தரிசனம்" என்ற திரைப்படத்தில் வரும் "மாலை நேரத்து மயக்கம்" என்ற பாடலி;ல் கவிஞர் இவ்வாறு எழுதுகின்றார். "இது மாலை நேரத்து மயக்கம்" "பூ மாலை போல் உடல் மணக்கும்" "இதழ் மேலே இதழ் மோதும்" "அந்த இன்பம் தேடுது எனக்கும்" என்று பெண் தனது விரகதாபத்தை வெளிப்படுத்துவது போலவும், "இது காலதேவனின் கலக்கம்" "இதை காதல் என்பது பழக்கம்" "ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப்போகும் துன்பத்தின் துவக்கம்" என்று ஆண் அதை மறுத்து துறவறத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இருவேறு எண்ணம் கொண்ட காதலன் காதலியின் நிலைப்பாட்டை பல்லவியிலேயே ஆணித்தரமாக சொல்ல முடியும் என்றால் அது கவிஞர் கண்ணதாசனைத் தவிர வேறு யாராலும் இயலாது.
"பாவமன்னிப்பு" திரைப்படத்தில் நடிகர் சிவாஜி ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து, சந்தர்ப்பவசத்தால் சிறுவயதிலேயே ஒரு இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு, இளைஞனானபின் பாடுவதுபோல் ஒரு காட்சி. அக்காட்சிக்கு கவிஞர் எழுதிய பாடல் இது."எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்" அல்லாவின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்". வளர்ப்பால் இஸ்லாமியரான நடிகர் சிவாஜியின் கதாபாத்திரம், பிறப்பால் ஒரு இந்து என்பதால் அவரை அறியாமலேயே அவர் நாவில் ஓம்" என்று ஒலிப்பதாக பாடல் முழுவதும் ஓம் ஓம் ஓம் என்றே வருவது போல் அமைத்திருப்பது கவிஞர் கண்ணதாசனுக்கே உண்டான தனிச்சிறப்பு.
சினிமா உலகில் நுழைவது மிகக்கடினம். அவ்வாறு நுழைந்தாலும் ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பது மிக மிகக் கடினம். இந்த அனுபவம் கவிஞர் வாலியையும் விட்டு வைக்கவில்லை. சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சொந்த ஊருக்கே திரும்ப முடிவு பண்ணிய கவிஞர் வாலி, "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா" என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை கேட்டு தனது முடிவை மாற்றி மீண்டும் முயற்ச்சித்ததாக அவரே சுவைபட குறிப்பிட்டுள்ளார்.
நான் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வையில்" எகிப்திய இசையை கேட்டேன். "தென்றல் வந்து வீசாதோ" பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாசனையை கண்டேன். "அபூர்வ ராகத்தில்" நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ"வில் மெக்ஸிகன் இசையை கேட்டேன். உலகத்தில் உள்ள அனைத்து இசையும் அறிந்தவர் எம்எஸ் விஸ்வநாதன் என்று கண்ணதாசன் பெருமையாக கூறியிருந்தார்.
"கண்ணதாசன் எனக்கு கிடைத்திருக்காவிட்டால் நான் ஆர்மோனிய பெட்டியை தூக்கிக் கொண்டு கேரளாவுக்கு பாட்டு வாத்தியாராக போயிருப்பேன்" என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். "அடுத்த பிறவியில் நானும், விஸ்வநாதனும் ஒரு தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்" என்பார் கண்ணதாசன். இருவருக்கும் அப்படி ஒரு நட்பு இருந்தது.
கல்லாக படுத்திருந்து களித்தவர் யாருமில்லை. கை, கால்கள் ஓய்ந்த பின்னே உழைப்பதில் லாபமில்லை என்று உழைப்பையும், பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணை அது, இருக்கின்ற பிடி சோறுதனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோயில் அது என்று தாய்மையையும் போற்றினார். அர்த்தமுள்ள இந்து மதத்தில் பாவ புண்ணியங்களை வலியுறுத்தி தவறு செய்வோர் தண்டனை அடைவர் என எடுத்துக்காட்டுகிறார்.
திருக்குறளின் தாக்கம் கம்பனிடத்திலும், கம்பனின் தாக்கம் கவிஞரிடத்திலும் காண முடியும். எதுகை மோனையில் கம்பனுக்கு இணையானவர் கவிஞர். கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு உறையூரின் காவலனே வாழிய நீடு என்றும், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் என்றும் எதுகை, மோனையில் எழுத்தாள்கிறார் கவிஞர்.
தான் சொந்த படம் எடுத்ததை பெரிய தவறாகவே கருதினார். மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, கறுப்புப் பணம், கவலையில்லாத மனிதன் ஆகிய படங்கள் வணிகரீதியாக வசூலைக் கொடுக்கவில்லை. கசப்பான அனுபவங்களை கற்றுத்தந்தன. கவலையில்லாத மனிதன் கவிஞரை கவலையுள்ள மனிதனாக்கின.
கால்ஷீட் வேண்டி ஒரு நடிகரின் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். இதோ வருகிறேன் என்று சொல்லி சென்ற அந்த நடிகர் வீட்டின் பின்வாசல் வழியாக சொல்லாமலேயே சென்றுவிட்டார். இதையறிந்த கவிஞர் அந்த படத்தில், பிறக்கும்போதும் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான் என்ற பாடலை எழுதி அந்த நடிகரையே பாட வைத்தார்.
1962ல் திருக்கோஷ்டியூர் தொகுதியில் தமிழ் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால் சட்டசபையில் இடம் கிடைக்கவில்லை. அதே ஆண்டில் அன்னை படத்தில், புத்தியுள்ள மனிதரெல்லாம், வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற கவிஞரது பாடல் இடம் பெற்றது.
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.
கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார். ”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.
பல ஆயிரம் பாடல்கள் எழுதிய கண்ணதாசன், பல தத்துவ நூல்களை எழுதிய கண்ணதாசன் பேனா பிடித்து எழுத மாட்டார். சினிமாவுக்கு பாடல் எழுதும்போது நேராக எம்.எஸ்.விஸ்வநாதனின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு செல்வார். ஆர்மோனிய பெட்டி சகிதமாக விஸ்வநாதன் அமர்ந்திருப்பார். அருகில் படத்தின் இயக்குனர் அமர்ந்திருப்பார். கண்ணதாசன் நேராக சென்று ஆர்மோனிய பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொள்வார்.இயக்குனர் காட்சிக்காக சூழலை சொல்வார். எம்.எஸ்.விஸ்வாதன் மெட்டை இசைத்து காட்டுவார். உடனே கண்ணதாசன் பாடல் வரிகளை சொல்வார். அதனை அருகில் இருக்கும் உதவியாளர்கள் எழுதிக் கொள்வார்கள். மெட்டுக்குள் சிக்காத சில வார்த்தைகளை மாற்றுமாறு விஸ்வநாதன் சொல்வார், அதை மாற்றிச் சொல்வார் கண்ணதாசன். அதை உதவியாளர் திருத்தி எழுதிக் கொள்வார். எல்லாம் முடிந்த பிறகு உதவியாளர் எழுதிய பாடல் வரிகளை ஒரு முறை படித்து பார்த்துவிட்டு "வரட்டுமா விசு" என்றபடியே எழுந்து போய்விடுவார். அத்தனையும் 30 நிமிடத்துக்குள் முடியும். கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை இப்படித்தான் எழுதுவார்.
'கருப்பு பணம், ரத்த திலகம், சூர்யகாந்தி, அபூர்வ ராகங்கள்' ஆகிய படங்களில் ஒரு நடிகனாகவும் தன்னை நிரூபித்தார் கண்ணதாசன்.
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அவரே வாயசைத்து பாடிய பாடல்கள் : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்(கருப்பு பணம்), ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு(ரத்த திலகம்), பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது(சூர்யகாந்தி).



ரோசாப்பூ ரவிக்கைகாரி 1979 - Review

                                                ரோசாப்பூ ரவிக்கைகாரி 1979

ரவிக்கையோ பாவாடையோ அணிந்திராத பெண்கள் நிறைந்த வண்டிச்சோலை கிராமத்தில், ரவிக்கையும் பாவாடையும் அணிந்த மன்னார்பாளையத்து நந்தினியின் பாதம் பட்ட பிறகு நிகழ்ந்த மாற்றங்களுக்கெல்லாம் அவளும் ஒரு காரணம். அதற்காக அவள் பட்ட பாடுகளும் கொஞ்சம் நஞ்சமல்ல
எட்டாம் வகுப்புவரை படித்திருந்த நந்தினி வண்டிச்சோலை கிராமத்துக்கு வந்தபோது, நாட்டில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விடுதலைக்கு முந்தைய காலத்தில் நடந்தது நந்தினியின் கதை. நந்தினியின் முடிவே இன்றும் பெண்கள் பலருக்கும் ஏற்படுகிறது என்பதுதான் சோகம். நந்தினி நவீனத்தின் அம்சம் என்பதைப் பழமைவாதிகள் உணரும்வரை இத்தகைய சோக முடிவுகளே தொடரும் என்பது கவலை தரும் உண்மை.
அந்தக் கிராமத்துக்கு அவள் உள்ளாடையையும் கிராமபோனையும் பெட்ரோமாக்ஸ் விளக்கையும் கொண்டுவந்தாள். அவை எல்லாவற்றையும்விட அவள் கொண்டுவந்த புதிய நாகரிக மனம்தான் அந்தக் கிராமத்தினரை அதிர்ச்சியடையச் செய்தது. அவள் நகரத்தில் வாழ்ந்தவள்.
காலையில் பல் துலக்க அடுப்புக்கரியையோ ஆலங்குச்சியையோ வேலங்குச்சியையோ தேடாதவள். காலையில் எழுந்தவுடன் நீத்தண்ணியைக் (நீராகாரம்) குடிக்கும் பழக்கம் அற்றவள்.
அவளுக்கு ரசனையோடு குடிக்க காபித்தண்ணிதான் வேண்டும். அவளது ரசனையான வாழ்வைப் புரிந்துகொள்ள முடியாத மனிதர்களிடம் வந்து அவள் மாட்டிக்கொண்டாள்.
நந்தினியின் புருஷன் செம்பட்டையன், தலைச்சுமையாகப் பொருள்களைச் சுமந்துகொண்டு அக்கம்பக்கத்துக் கிராமங்களில் விற்றுவரும் வியாபாரி.
அவனுடைய தாய் ஆவுடையம்மாள் புயலுக்கே அசைந்துகொடுக்காத பழமைவாதப் பெருமரம். அவள் நிழலில் புருஷனுடன் கொஞ்சும் சூழல் வந்து வாய்த்தது நந்தினிக்கு.
பெரும் சுழலில் மாட்டிக்கொண்ட சிறு படகானாள் நந்தினி.
செம்பட்டையோ வலுவற்ற துடுப்பானான்; தாய் பக்கம் நிற்பதா தாரத்தின் பக்கம் சாய்வதா என்பது புரியாமல் தடுமாறிப்போனான்.
நந்தினியின் எழிலும் நாகரிகமும் அந்த ஊரில் அனைவரையும் ஏறிட்டுப் பார்க்க வைத்தது. தள்ளாடாமல் நிற்கக்கூட முடியாத நீர் மோர் தாத்தாகூட அவளைப் பார்த்து நெஞ்சுருகி நின்றார்.
தங்காயி உள்ளிட்ட கிராமத்துப் பெண்கள் அனைவருக்கும் நந்தினிபோல் உடுத்திக்கொள்ளவும் நடந்துகொள்ளவும் ஆசை எழுந்தது. மாமியாரின் வசவுக்கிடையிலும் கணவனது எரிச்சலுக்கிடையிலும் நாகரிகத்துக்கு முகம்கொடுக்க ஆசைப்பட்டார்கள்.
முகத்துக்கு பவுடர், தலைக்கு நறுமண எண்ணெய் என நந்தினியின் பவுசுக்கு அங்கே மவுசு அதிகரித்தது. நந்தினியும் தானறிந்த நாகரிகத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்தாள்.
நந்தினியின் நாகரிகத்தைக் கேள்விகேட்ட பண்ணையாரின் மனைவிகூடத் தன் மகள் தில்லாயிக்குப் பட்டணத்து வரன் அமைந்தபோது அவளுக்கும் உள்ளாடை, ரவிக்கை, பாவாடை, பவுடர் இத்யாதிகளை வாங்கிவரும்படி செம்பட்டையைப் பணிக்கிறாள்.
இதுதான் கிராமத்தினரின் மனமாக இருக்கிறது. அவர்களுக்கு நந்தினி போல நாகரிகம் கொள்ளவும் ஆசை, கட்டிதட்டிப்போன கிராமத்துப் பழக்கவழக்கங்களைக் கைவிடவும் அச்சம்.
இந்த இரண்டுக்கும் இடையே அகப்பட்டு உழன்றார்கள். இன்றுவரை இப்படியான மனநிலை மனிதரிடையே தொடரத்தான் செய்கிறது.
கூட்டுக் குடும்பத்தில் செம்பட்டையின் அண்ணன் சடையால் பொருந்திப்போக முடிந்த அளவு செம்பட்டையால் பொருந்திப்போக முடியாததற்குக் காரணம் ஒருவகையில் நந்தினிதான்.
பாட்டுக் கேட்க ஆசைப்பட்டுத் தன் தந்தை வாங்கித் தந்த கிராமபோனை வீட்டுக்கு எடுத்துவந்த நந்தினியிடம் சண்டைபோட்ட ஆவுடையம்மாள், கிராமபோனை உடைத்ததுடன் நந்தினி தொடையிலும் சூடு போட்டுவிட்டாள்.
தினசரி வேலைகளின் அலுப்புப்போக நாட்டுப்புறப் பாட்டுப் பாடும் பழக்கம்கொண்ட கிராமத்தினருக்கு கிராமபோன் கருவியின் மீது ஒவ்வாமை ஏன் ஏற்பட வேண்டும்? பழமைவாதம் நவீனத்துக்கு விடுத்த எச்சரிக்கையாகவே அமைந்தது நந்தினிக்கு
ஆவுடையம்மாள் போட்ட சூடு. அதன் பின்னர் சொத்தைப் பாகம் பிரித்துத் தனக்கெனத் தனி வீடு, வாழ்க்கை ஆகியவற்றை அமைத்துக்கொண்டான் செம்பட்டை.
தனியாக வாழ்க்கை நடத்தும் செம்பட்டையின் வீட்டுக்கு வருகிறான் மாணிக்கம். ஆங்கிலேய துரையிடம் பணிபுரியும் அவனிடம் தென்படும் நாசூக்கான நடவடிக்கைகளும் பண்பான பழக்கவழங்கங்களும் நந்தினியைக் கவர்கின்றன.
அவன் ரசனையுடன் உண்ணும் விதத்தையும் வெற்றிலை மெல்லும் அழகையும் ரசித்துப் பார்க்கிறாள் நந்தினி. அவர்களது மனங்கள் மௌன மொழியில் ரகசிய உரையாடலைநிகழ்த்திக்கொள்கின்றன.
மனம் முன்மொழியும் உரையாடலை உடம்பு வழிமொழியும் தருணமும் வாய்க்கிறது. மன்னார்பாளையத்து மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குத் தன்னால் வர இயலாது என்பதால், நந்தினியை மாணிக்கத்துடன் அனுப்பிவைக்கிறான் செம்பட்டை.
ஓடை நீர் ஆற்றுடன் கலப்பதுபோல் மாணிக்கத்துடன் கலக்கிறாள் நந்தினி. பழமைவாதம் திருமணம் கடந்த உறவைப் பண்பாட்டைத் தகர்க்கும் வெடியாகப் பார்க்கும் வேளையில்,
நவீனமோ அதை ரசனைக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் வாண வேடிக்கையாகப் பார்க்கிறது.
கோயில் விழாவுக்குப் போய்வந்த நந்தினி பெட்ரோமாக்ஸ் விளக்கொன்றை வாங்கி வருகிறாள். லாந்தர் விளக்கைப் போல் அல்லாமல் அதன் வெளிச்சம் பளிச்சென்று கண்ணைப் பறிக்கிறது. அதன் வெளிச்சத்தில் அமர்ந்து செம்பட்டையும் நந்தினியும் பேசிக்கொள்கிறார்கள்.
“மனுசன் காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக்கிடணும். நாகரிகமா இருக்குறதும்
உடம்ப சுத்தமாக வச்சிகிட்றதும் தப்புங்கிறாங்க.
அதான் மனசுக்குக் கஷ்டமாயிருக்கு” என்கிறாள் நந்தினி.
“போட்டிருக்குற துணியும் உடம்பும் சுத்தமா இருந்தா போதாது. மனசுதான் சுத்தமா இருக்கோணும்” என்கிறான் செம்பட்டை, நந்தினிக்குச் சுருக்கென்றிருக்கிறது.
நந்தினியின் உறவு பற்றி ஊர் பேசிக் களிக்கிறது. அந்தப் பேச்சு செம்பட்டை காதையும் எட்டுகிறது.
நந்தினியின் முந்தானையில் மண் ஒட்டியுள்ளதாக திருச்செங்கோடன் செம்பட்டையிடமே சொல்ல, இருவருக்கும் சண்டை மூள்கிறது.
தக்க நேரத்தில் பயில்வான் வந்து சண்டையை விலக்கிவிடுகிறார். ஊரின் ஏச்சு பேச்சையெல்லாம் பெரிதுபடுத்தாத செம்பட்டை ஒருநாள் தானே நேரில் நந்தினியைப் பார்க்கிறான்.
நவீனத்தின் நாகரிகப் போக்கை எதிர்கொள்ளத் தெரியாத செம்பட்டையன் மனம் கொதிக்கிறது; குளத்தில் மூழ்கி நிம்மதியடைகிறான். செம்பட்டையனை எதிர்கொள்ள அஞ்சி நந்தினியும் கயிற்றில் தொங்கிவிடுகிறாள்.
வண்டிச்சோலைக்கு நாகரிகம் கற்றுத் தந்த தன் பணி முடிந்துவிட்டதாகக் கருதியவள் தன் கதையை முடித்துக்கொண்டாள்.
நவீனத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் பழமைவாதம் இப்படி எத்தனை நந்தினிகளின் உயிரை வாங்கியுள்ளதோ யாருக்குத் தெரியும்?
தேவராஜ் மோகன் இயக்கிய ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ (1979)
திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் இது.
படத்தின் கதையை எழுதியவர் ஆவனஹள்ளி கிருஷ்ணா. திரைக்கதை வசனத்தை எழுதியவர் கிருஷ்ணா (விஜய் கிருஷ்ணராஜ்).
Rசெல்லப்பா