சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஸ்டைல் மன்னனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழ்சினிமாவை பொறுத்த வரைக்கும் பலதரப்பட்ட சூப்பர் ஸ்டார்கள பார்த்துட்டு வருது. தியாகராஜ பாகவதர், சின்னப்பா,எம்.ஜி.ஆர். இவங்களுக்கு அடுத்த வரிசையில ஏன் இப்போ வரைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார்னா அது  ரஜினி தலைவர் மட்டும் தான். அது மறுக்க முடியாத உண்மையும் கூட.

ஆறிலிருந்து அறுபது வரைக்கும் அவருக்கு இங்க ரசிகர்கள் இருக்கத்தான் செய்யுறாங்க. பேச்சு வழக்குல எனக்கு ரஜினிய பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட அவர் படம் திரைக்கு வரும் போது முதல் ஷோ பாக்க வரிசையில நிக்கதான் செய்யுறாங்க.

தமிழ் சினிமாவுல பாடல்கள், வசனங்கள் மூலமா மட்டுமே கைகதட்டல்கள் வாங்கிய கதாநாயகர்களுக்கு மத்தியில் பஞ்சு டையலாக் பேசி, ஸ்டைல் மூலமா ரசிகர்கள கவர்ந்ததாகட்டும், அழகான கதாநாயகர்களையே காட்டிய திரைத்துறையில கருப்பான ஒரு கதாநாயகனான தன்னாலயும் செயிக்க முடியும்ன்னு நிரூபிச்சதாகட்டும், ரஜினிக்கு தமிழ் சினிமாவுல அசைக்க முடியாத சிம்மாசனத்த கொடுக்க உதவுச்சு.

சாதாரண வசனமாவே இருந்தா கூட அது தலைவர் வாயில இருந்து வரும் போது பஞ்ச் டைலாக்கா மாறுகிற அந்த தருணம் ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கே கிடைச்ச வரப்பிரசாதம்.

"ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி", "சீவிடுவேன்", "இது எப்புடி இருக்கு", "என் வழி தனி வழி", "பன்னிங்க தான் கூட்டமா வரும்", "பேற கேடதும் சும்மா அதிருதுல்ல", "நான் எப்போ வருவேன் எப்புடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரைக்டா வருவேன்" போன்ற வசனமெல்லாம் திரையில ரஜினி வாய் மூலமா கேக்கும் போது கூஸ்பம்ஸ் மொமண்ட் தான்.

ஸ்டைல் அப்புடிங்குற வார்த்தை ஒட்டு மொத்தமா குத்தகைக்கு எடுத்து வச்சது கூட தலைவர்ன்னு சொல்லலாம். கலைஞ்ச நல முடிய ஒரு கையால சீவி விடறதா இருக்கட்டும், சிகரெட்ட ஒரு கையால தூக்கி போட்டு வாய்ல பிடிக்குறதா இருக்கட்டும், படிக்கட்டுல ஸ்டைலா நடந்து வர்றதா இருக்கட்டும் இது அவரால் அவருக்கான டிரேட்மார்க் முத்திரைகள்.

இன்னும் பல பேறு அவர் வெறும் ஸ்டைல் மட்டும் தான் நடிப்புலா ஒன்னும் இல்லன்னு சொன்னவங்களுக்கு வாயடைக்கவே அவர் படைச்ச படங்கள் ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, தப்பத்தாளங்கள், முள்ளும் மலரும், கபாலி இன்னும் நீண்டுக்கிட்டே போகும்.

தலைவர் படத்த  ஃபர்ஸ்டே பர்ஸ்ட் ஷோ பார்க்க போற எந்த ஒரு ரசிகனும் அவர ஸ்கீர்ன்ல என்ன ஆங்கில்ல பார்க்க்போறோம், எந்த மாதிரி ஓப்பனிங் சீன் இருக்கும்ன்னு நினைச்சுட்டு இருக்குற அந்த தருணம் வேற எங்கேயும் கிடைக்காது.

அரசியல் ஈடுபாடு, அரசியல் சார்ந்த கருத்துக்கள் போன்ற செயல்களால் உன்னை வெறுத்தாலும் சினிமா என்ற ஒரு அங்கம் எங்கள் வாழ்வில் இருக்கும் வரையில் எங்களின் ஒரே தலைவன் நீ மட்டுமே!! பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!!