அப்புடி என்ன கிழிச்சுட்டாங்கன்னு மகளிர் தினம் கொண்டாடுறோம்??

அப்புடி என்ன கிழிச்சுட்டாங்கன்னு மகளிர் தினம் கொண்டாடுறோம்??

எங்க பாத்தாலும் மகளிர் தின வாழ்த்துக்களா கண்ணுக்கு தென்படுது. அப்புடி ஆண்களால பண்ண முடியாதத என்ன பெண்கள் பண்ணிட்டாங்கன்னு பாத்தா, ஆமா உண்மையாவே ஆண்களால பண்ண முடியாத பல விசயங்கள பெண்கள் பண்ணிட்டு தான் தான் அப்புடிங்கிற கர்வமே இல்லாம நம்மோட பயணிச்சுட்டு வராங்க.

எல்லாரோட வீட்டுலயும் அம்மான்னு ஒரு ஜீவன் காலையில எல்லாருக்கு முன்னாடியும் எழுந்திருச்சு, வீட்ட சுத்தமாக்கி, பசங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணிட்டு, அவங்கள பள்ளிக்கூடத்துக்கு ரெடி பண்ணிட்டு, அவங்களுக்கு சாப்பாடு ஊட்டி, கணவன ஆபிசுக்கு ரெடி பண்ணி, மதிய சாப்பாட்ட பேக் பண்ணி கொடுத்துட்டு, அவ சாப்பிட ஆரம்பிக்கும் போதே மதியமாகிடும், அதுக்கப்பறம் பழைய துணி எல்லாத்தையும் துவச்சி, வீட்ட அழகு படுத்தி, திரும்ப ஸ்கூல் முடிச்சு வர்ற பிள்ளைகளை கவனிச்சு, வீட்டு பாடம் படிக்க வச்சு, நைட்டு மறுபடியும் சாப்பாடு ரெடி பண்ணி அவங்களுக்கு சோறு ஊட்டி, எல்லாரையும் தூங்க வச்சுட்டு அவ தூங்கும் போது நள்ளிரவ தாண்டிடும். அவ படுற கஷ்டத்த அவளால மட்டுமே உணர முடியும்.

என்ன ஓவரா பில்டப் கொடுக்குற, இதல்லாம் நாங்க பண்ண மாட்டோமா? அப்புடின்னு ஆண்களாகிய நாம கேட்டா, சத்தியமா பண்ட மாட்டோம், பண்ண முடியாது இதான் நிதர்சனமான உண்மை. ஒரு நாள் பண்ணலாம், ரெண்டு நாள் பண்ணலாம் ஆனா வருசம் முழுசும் பண்ண பெண்கள தவிர ஒரு பயலாலயும் பண்ண முடியாது. 

நானெல்லாம் எந்த ஒரு பெண்ணையும் சார்ந்து இல்லன்னு மட்டும் யாராலயும் சொல்ல முடியாது. அம்மாவா, சகோதரியா, மனைவியா, ஆசானா, மகளா, தலைவியா இப்படி ஏதாவது ஒரு பாத்திரத்துல பெண்ணானவள் நம்மகூட பயணிக்குறா!!  அப்புடி பட்ட பெண்களுக்கு நாம பண்ண பிரதி உபகாரம் என்ன??

வீட்டோடயே அடைச்சு வைக்குறது, அவளோட ஆசையை கேக்காமலேயே சீக்கிரமா திருமணம் பண்ணி வைக்குறது, பெண்களை காம பொருளா பயண்படுத்துறது. இது தான இப்போ நடந்துட்னு இருக்கு. இதற்கு தீர்வு தான் என்ன??

 இன்னும் இங்க பல பெண்களுக்கு அடுப்படியே வாழ்க்கையா முடிஞ்சு போறதுதான் வருத்தம் தரக்கூடியா நிலைமையா இருக்கு.

பல பெண்கள் இன்னுமும் எங்க வீட்டுல படிக்க விட மாட்றாங்க, வெளியூருக்கு போக விடமாட்றாங்க, என்ன கேக்காமயே கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டாங்கன்னு சொல்லும் போது ஒரு வகையில பாவமாவும், இன்னொரு பக்கம் கோவமாவும் வருது. உண்மையை சொல்லப்போனா கொடுத்து வச்ச யுகத்துல தான் நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்க(சில விசயங்களுக்கு மட்டும்).

சுமார் 100 வருசத்து முன்னாடிலா பாத்தா, பெண்களுக்கு அடிப்படை கல்வியே மறுக்கப்பட்டுச்சு, குழந்தை திருமணம் பண்ணிவச்சாங்க, 13வயசு பொண்ணுக்கு 40 வயசு ஆண திருமணம் பண்ணி வச்சாங்க( இன்னமும் கூட வறுமையால சில பகுதியில நடக்குது), அந்த வயதான கணவன் இறந்துட்டா, அந்த பெண்ண மொட்டை அடிச்சு, வெள்ளை புடவை உடுத்தி வீட்டோட ஒரு மூலையில உக்கார வச்சுருவாங்க, அவங்க எந்த ஒரு நல்ல விசயத்துலயும் கலந்துக்க அனுமதி இல்ல. பல தார திருமணம் நடைமுறையில இருந்துச்சு. அத விட பெரிய கொடுமையா சதி என்கிற உடன்கட்டை ஏறும் பழக்கம், கணவன் இறந்துட்டா இறந்த கணவனின் எரிகிற சடலத்தோட மனைவியையும் தூக்கி போடூற கொடுமையான பழக்கம் இருந்துச்சு. இத விட கொடுமையா பெண்கள் ஆடை அணியவே தடை இருந்துச்சு சில ஊர்கள்ல. இத்தனை சிரமங்களையும் தாண்டி இந்தியாவின் முதல் டாக்டராவும், இந்தியாவும் முதல் பெண் மேலவைத் தலைவரா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அம்புஜத்தம்மாள், போன்ற பெண் மணிகளும், வீரத் தமிழச்சி வேலு நாச்சியார், குயிலி போன்றவங்களும், உலகிற்கே அன்னையான அன்னை தெரசாவும் நமக்கு கிடைச்சாங்க.

ஆனா இன்னைக்கு இருக்குற சில பெண்கள் ஆண்களுக்கு நிகரா நாங்களும் தண்ணி, தம், போதைப் பொருட்கள் பயன்படுத்துவோம்ன்னு பெருமை பேசிக்கிட்டு இருக்காங்க.

எத்தனை பெண்கள் அன்னை தெரசாவயோ, வேலு நாச்சியயோ முன்னுதாரணம் கொண்டு வாழ்ந்து வர்றீங்க. நமக்கு என்ன வீட்டுல படிக்க சொன்னாங்க படிச்சோம், முடிஞ்சா லவ் மேரேச் இல்லையா வீட்டூல பாக்குற பையன கல்யாணம் பண்ணிட்டு பாரின்ல செட்டில் ஆகிடணும். இதத்தன கொள்கையா வச்சுருக்கீங்க??

தயவு செஞ்சு ஒவ்வொரு பெண்ணும் எனக்கு எங்க வீட்டுல சுதந்திரமே இல்ல, என்ன அடைச்சு வைக்குறாங்கன்னு பொலம்பாம, அழுத்தி பொதச்சு வைக்குற விதை தான் விருச்சமா வருது, சின்ன விதைக்குள்ள அவ்வளோ பெரிய மரம் ஒளிஞ்சு இருக்கும் போது, உங்களுக்குள்ள மறைஞ்சு இருக்கிற திறமைய கண்டு பிடிச்சு வெளியில கொண்டு வாங்க. சமூகத்துக்கு தேவையான ஏதாவது ஒரு உதவிய பண்ணுங்க!! நாளைய சமுதாயம் உன்னை கை கூப்பீ வணங்கும்!!

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் பெண்ணே!!